
ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டி நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்நிலையில் ரோகித் சர்மா தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணி விளையாடி வரும் நிலையில் 4 பேர் ரிசர்வ் வீரர்களாக இருக்கிறார்கள். அதன்படி ரிங்கு சிங், கலீல் அகமது, சுப்மன் கில், ஆவேஸ் கான் ஆகிய 4 பேரும் ரிசர்வ் வீரர்களாக இருக்கும் நிலையில் தற்போது பிசிசிஐ ஒரு முடிவெடுத்துள்ளது.
அதன்படி சுப்மன் கில் மற்றும் ஆவேஷ்கான் இருவரையும் மீண்டும் இந்தியா வரவழைக்க திட்டமிட்டுள்ளனர். இவர்கள் இருவரும் நாடு திரும்பவுள்ள நிலையில் ரிங்கு சிங் மற்றும் கலீல் அகமது ஆகியோர்கள் மட்டும் இந்திய அணியில் தொடர்வார்கள். மேலும் இவர்கள் இருவரும் கனடா அணிக்கு எதிரான போட்டி முடிவடைந்த பிறகு நாடு திரும்பவார்கள் என்று கூறப்படுகிறது.