இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையே நடைபெற்ற டி20 போட்டிகளில் 3 தொடர்களிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி பேட்டர்கள் தரவரிசையில் முதலிடத்தில் டிராவிஸ் ஹெட் இருக்கிறார். அதன் பிறகு 2-ம் இடத்தில் இந்திய வீரர் சூரியகுமார் யாதவும், 3-ம் இடத்தில் பில் சால்ட்டும், 4-ம் இடத்தில் இந்திய வீரர் ஜெய்ஸ்வாலும், 8-ம் இடத்தில் இந்திய வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டும் இருக்கிறார்கள்.

இந்த பட்டியலில் தற்போது முதல் 10 இடங்களில் 3 இந்திய வீரர்கள் இடம்பெற்று இருப்பது பாராட்டுகளை பெற்றுள்ளது. இதேபோன்று பவுலர்கள் தரவரிசையில் முதலிடத்தில் மார்கஸ் ஸ்டோயினிஸ் இருக்கிறார். இதில் முதலிடத்தில் இருந்த இலங்கை வீரர் ஹசரங்கா ‌ 4-ம் இடத்திற்கு பின் தங்கியுள்ளார். மேலும் இந்த பட்டியலில் 8-ம் இடத்தில் இந்திய வீரர் ரவி பிஷ்னோய் இருக்கிறார்.