இன்றைய காலகட்டத்தில் தொழில் நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு தினம்தோறும் புதுவிதமான மோசடிகள் நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக அரசு எச்சரித்து வந்தாலும் மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக சைபர் கிரைம் தாக்குதல்கள் என்பது அதிகரித்துவிட்டது.

ஆன்லைன் மோசடியில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட குழுவை மட்டும் குறி வைப்பதில்லை. சைபர் குற்றத்திற்கு யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படலாம். ஆனால் தற்போது சைபர் கிரைம் திருடர்களால் ஐடி ஊழியர்கள் பெருமளவில் பாதிக்கப்படுவதாக அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகி உள்ளது. லாபம் ஈட்டக்கூடிய நிறுவனங்கள், வங்கி அல்லது நிதி நிறுவனங்கள், அதிக லாபம் பார்க்கும் தொழிலதிபர்கள் மற்றும் ஐடி துறையில் வேலை பார்க்கும் நபர்களை குறி வைத்து சைபர் கிரைம் திருடர்கள் ஈடுபடுவதாக தெரியவந்துள்ளது.