
33 வயதாகும் இந்திய அணி வேகபந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஷர்தூல் தாகூர் ஐபிஎல் 2024 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி இருந்தார். இதனைத் தொடர்ந்து 2025 ஆம் ஆண்டுக்கான மெகா ஏலத்தில் எந்த அணியும் இவரை வாங்கவில்லை. இவர் இந்திய அணிக்காக கடந்த எட்டு ஆண்டுகளில் 11 டெஸ்ட், 47 ஒரு நாள் போட்டிகள் மற்றும் 25 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இவர் ஐபிஎல் ஏலத்தில் விலை போகாதது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஐபிஎல் ஏலத்தில் விலை போகாத நிலையில் இவர் தற்போது தொடர்ந்து கடினமாக உழைத்து முரட்டுபாமில் இருக்கின்றார். சமீபத்தில் ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணிக்கு எதிராக 51 மற்றும் 119 என இரண்டு இன்னிங்ஸ்களிலும் மிரட்டலாக செயல்பட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து மேகாலயா அணிக்கு எதிராக ஹாட்ரிக் விக்கெட்டை எடுத்து அசத்தியிருந்தார். ரஞ்சி கோப்பையில் இப்படி அதிரடியாக செயல்பட்டதை பார்த்து இங்கிலாந்து கவுண்டி அணியான எஸ்செக்ஸ் அணி இவரை ஒப்பந்தம் செய்து உள்ளது.