ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் பெங்களூரு மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் குவித்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்களை குவித்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் போட்டியின் போது பேட்டிங் செய்த பெங்களூர் அணி வீரர் தினேஷ் கார்த்திக் டக் அவுட் ஆனார். இதன் மூலம் ஐபிஎல் போட்டியில் அதிகம் முறை டக் அவுட் ஆன வீரர்கள் பட்டியலில் தினேஷ் கார்த்திக் முதலிடத்தை பிடித்துள்ளார். இவர் இதுவரை 18 முறை டக் அவுட் ஆகியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் ரோகித் சர்மாவும், மேக்ஸ்வெலும் (17 முறை) இருக்கிறார்கள். மேலும் இவர்களுக்கு அடுத்த இடத்தில் பியூஸ் சாவ்லா (15 முறை) இருக்கிறார்.