பஞ்சாப் அணி தரப்பில் அதிரடியாக ஆடிய பிரியன்ஸ் ஆர்யா 43 பந்தில் 103 ரன்கள் எடுத்தார். சென்னை தரப்பில் கலீல் அகமது, அஸ்வின் தலா இரண்டு விக்கெட்டுகளை எடுத்தார்கள். தொடர்ந்து 224 எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு ஆடிய சென்னை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 21 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலமாக 18 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணி வென்றது. இந்த ஆட்டத்தில் சென்னை தரப்பில்  டெவான் கான்வே  69 ரன்கள் எடுத்தார்.

மேலும் இந்த ஆட்டத்தில் கான்வே ரிட்டையர்டு அவுட் மூலமாக வெளியேறினார். அவருக்கு பதிலாக ஜடேஜா களம் இறங்கினார். ரிட்டையர்டு அவுட்  மூலமாக ஒரு மோசமான சாதனைக்கு சொந்தக்காரர் ஆகியுள்ளார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் ரிட்டையர்டு அவுட்  மூலமாக வெளியேறிய முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார் கான்வே.