
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்களின் பெரியவர்கள் வரை செல்போனை பயன்படுத்தி வருகிறார்கள். இதில் ஒரு புறம் நல்லது இருந்தாலும் மறுபுறம் கெடுதலும் இருக்கிறது. அதாவது பல இடங்களில் செல்போன் வெடித்து உயிர் போன சம்பவம் நடைபெற்று வருகிறது. செல்போனை சார்ஜ் செய்துவிட்டு அதனை பக்கத்தில் வைத்துக்கொண்டு தூங்க வேண்டாம் என்று ஆப்பிள் நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது இதனால் உடலுக்கும் பாதிப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
மேலும் ஐபோனில் நல்ல காற்றோட்டம் உள்ள இடங்களில் வைத்து சார்ன் செய்ய வேண்டும். சார்ஜில் இருக்கும் போது அருகில் வைத்துக்கொண்டு தூங்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இரவு தூங்கும் பொழுது போர்வை அல்லது தலையணைக்கு அடியில் போனை வைத்தாலும் அது வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.