டெல்லி அருகே நொய்டாவில் காமா 1-வது செக்டார் பகுதி உள்ளது. இங்கு ஒரு தனியார் கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு அதே பகுதியில் வசிக்கும் நிதின் பாடி என்பவர் தன் மகனை சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். அந்த சிறுவன் பெயர் யுதிஷ்டிரன் (7). இந்த சிறுவனின் இடது கண்ணில் அடிக்கடி நீர் வடிந்ததால் மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது கண்களில் பிளாஸ்டிக் போன்ற பொருள் இருப்பதாகவும், ஆபரேஷன் செய்து அதனை அகற்றி விடலாம் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

கடந்த 11ஆம் தேதி சிறுவனுக்கு ஆபரேஷன் நடந்த நிலையில் பெற்றோருக்கு ‌ பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது இடது கணக்கு பதிலாக மருத்துவர் தவறுதலாக வலது கண்ணில் ஆபரேஷன் செய்துவிட்டார். சிறுவனின் ஆப்ரனுக்காக 45 ஆயிரம் ரூபாய் கட்டணமாக செலுத்தியுள்ளனர். இந்நிலையில் மருத்துவரின் உரிமையை ரத்து செய்ய வேண்டும் என்று பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது