
பிரபல சன் டிவியில் ஒளிபரப்பான எதிர்நீச்சல் சீரியல் நடிகர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ஓடிக் கொண்டிருந்தது. இந்த சீரியலில் அதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்து இறந்த பிறகு சீரியலில் விறுவிறுப்பு சற்று குறைந்தது. இருப்பினும் அந்த கதாபாத்திரத்திற்கு நடிகர் வேலராம மூர்த்தியை அணுகினர். அவர் ஆதி குணசேகரன் ஆக நடித்த நிலையில் சற்று சீரியல் விறுவிறுப்பாக சென்றது. இருப்பினும் மாரிமுத்து இடத்தை அவரால் நிரப்ப முடியவில்லை என்றே கூறலாம். இருப்பினும் சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் சென்ற நிலையில் திடீரென சீரியலை முடித்துவிட்டனர்.
அவசரமாக சீரியலை முடித்தது ஏன் என பலரும் கேட்டு வருகிறார்கள். இதற்கிடையில் நடிகர் வேலராமமூர்த்தி எதிர்நீச்சல் சீரியலில் நடித்ததால் எனக்கு மிகப்பெரிய அவமானம் கிடைத்ததாக கூறியதாக ஒரு செய்தி ஒன்று தீயாக பரவியது. ஆனால் தற்போது அதில் உண்மை இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், எதிர்நீச்சல் சீரியல் என்னை உலகத் தமிழர்கள் எல்லோரிடமும் கொண்டு சேர்த்துள்ளது. நான் அந்த சீரியலில் மனப்பூர்வமாய் நடித்தேன் என்பதை உண்மை. மேலும் தயவுசெய்து இது போன்ற பொய்யான தகவல்களை யாரும் பரப்ப வேண்டாம் என்று பதிவிட்டுள்ளார்.