திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு ஏராளமான மக்களும், ஊழியர்களும் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் காமராஜ் என்பவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மை பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு ஒரு நாய் சுற்றி திரிந்தது. அந்த நாயை காமராஜர் இரும்பு கம்பியால் தாக்கி துன்புறுத்தியுள்ளார்.

இதனால் வலி தாங்க முடியாமல் நாய் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்தது. இது தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது. அந்த வீடியோவை பார்த்த பலரும் காமராஜரின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் மண்ணச்சநல்லூர் பேரூராட்சி செயல் அலுவலர் காமராஜை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.