
கன்னட சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் கிச்சா சுதீப். இவர் தமிழிலும் புலி உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் ராஜமவுலி இயக்கத்தில் வெளிவந்த நான் ஈ என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பான் இந்தியா நடிகராக அறியப்பட்டார். கன்னட சினிமாவில் ஹீரோவாக நடித்தவரும் கிச்சா சுதீப் பிற மொழிகளில் வில்லன் ஆகவும் நடித்து வருகிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கும் நிலையில் நேற்று அவருடைய தாயார் சரோஜா சஞ்சீவ் (80) உடல் நலக் குறைவின் காரணமாக காலமானார். கடந்த சில தினங்களாக அவருடைய தாயார் உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்ட பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவருடைய மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் தற்போது நடிகர் கிச்சா சுதீப் தன்னுடைய x பக்கத்தில் ஒரு உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார். அதில் ஐ மிஸ் யூ அம்மா. 24 மணி நேரத்தில் என்னுடைய வாழ்க்கையே மாறிவிட்டது. என்னுடைய வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்த என் அம்மா மனித வடிவிலான கடவுள். என்னுடைய வாழ்க்கையில் மிகவும் விலைமதிப்பில்லா உயிர் ஒன்று பிரிந்து விட்டது என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் தெரிவித்து வருகிறார்கள்.