
ஐபிஎல் தொடங்கி பதினெட்டாவது சீசன் ஆனது மார்ச் 22ஆம் தேதி முதல் பிரமாண்டமாக நடைபெற உள்ளது, ரோகித் சர்மா, விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்கள் இந்த தொடரில் பங்கு பெற்றாலும் அனைத்து ரசிகர்களுடைய கவனமும் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மீது தான் இருக்கும், இந்த நிலையில் நேற்று சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ் தோனி சென்னை வந்தடைந்துள்ளார்.
பொதுவாக ஐபிஎல் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே போட்டி நடைபெறும் இடத்திற்கு வந்து பயிற்சி மேற்கொள்வது தான் இவருடைய வழக்கம். ஆனால் இந்த முறை 23 நாட்களுக்கு முன்பாக சென்னை வந்துள்ளார். தோனியின் சென்னை வருகை புகைப்படத்தை சிஎஸ்கே நிறுவனம் பகிர்ந்துள்ளது. அப்போது அவர் அணிந்திருந்த டீ ஷர்ட் கவனம் ஈர்த்துள்ளது. அதி மோர்ஸ் வகை எழுத்து குறியீடுகளான புள்ளி மற்றும் கட்டம் இருந்தது. அதன் அர்த்தம் கடைசியாக ஒருமுறை என்பது. இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடருடன் ஓய்வு பெறப்போவதை மறைமுகமாக தோனி தெரிவித்துள்ளாரா? என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளார்கள்.