கரூர் மாவட்டத்திலுள்ள அரசு கல்லூரியில் பி.ஏ வரலாறு படித்து வரும் மாணவியை நேற்று பகல் 12:00 மணி அளவில் கடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாணவி மதியம் பேருந்தில் இருந்து இறங்கி தன் தோழிகளுடன் கல்லூரிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவர்களை ஆம்னி வேனில் பின்தொடர்ந்து சென்ற சில வாலிபர்கள் திடீரென அந்த மாணவியை மட்டும் கடத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இது தொடர்பாக உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையின் போது மாணவியின் பக்கத்து கிராமத்தை சேர்ந்த நந்தன் என்பவர் அவரை ஒருதலையாக காதலித்து வந்ததுள்ளார். அந்த மாணவி காதலிக்க மறுப்பு தெரிவித்ததால் வாலிபர் கடத்தி சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் அரவக்குறிச்சி அருகே நந்தனின் உறவினர் வீட்டில் இருந்த மாணவியை தனிப்படை போலீசார் பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து நந்தனியின் தாய், பாட்டி உள்ளிட்ட ஐந்து பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.