
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் கட்சிகள் கூட்டணி பற்றிய பேச்சு வார்த்தையில் தீவிரமாக இறங்கியுள்ளது. இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியதாவது, ஒருநாள்கூட எனக்கு ஓய்வு இல்லை; ஒரு மணி நேரம்கூட எனக்குத் தனிமை இல்லை.
கட்சி நிர்வாகிகள் கட்டாயப்படுத்தி தங்கள் ஏற்பாடு செய்துள்ள விழாக்களில் கலந்துகொள்ள வைப்பது மன அழுத்தத்தைத் தருகிறது. நாள் கணக்கில், மணிக்கணக்கில் கிடையாய் கிடந்து அழுத்தம் கொடுத்து என்னை இழுத்துச் செல்வதால் கட்சிப் பணிகளை என்னால் மேற்கொள்ள முடியவில்லை என கூறியுள்ளார்.