
கோழியால் ஏற்பட்ட சண்டையால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சை அடுத்த மனோஜ்பட்டியில் கோழியை விரட்டியதாக கூறி இரு குடும்பத்தினரிடைய தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இதில் ஒரு தரப்பினர் தஞ்சை மருத்துவ கல்லூரி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்ற நிலையில் காவல்துறையினர் தரக்குறைவாகப் பேசி திட்டி அனுப்பியதாக புகார் அளித்துள்ளனர். மேலும் ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை கட்டையை கொண்டு தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.