
இந்தியாவில் இனிவரும் காலத்தில் ஒரு தமிழரை ஆவது பிரதமராக்க உறுதி எடுப்போம் என்று அமித்ஷா தெரிவித்துள்ளார். தமிழகம் வந்துள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னை கோவிலம்பாக்கத்தில் தென் சென்னை பாஜக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அந்த கூட்டத்தில் பேசிய அவர், 300 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்ற பாஜக மீண்டும் நரேந்திர மோடி தலைமையில் ஆட்சி அமைப்பது உறுதி. காமராஜர் மற்றும் மூப்பனார் ஆகிய இரண்டு பேர் பிரதமர் ஆவதை இழந்துள்ளோம். இருமுறை பிரதமர்களை தவறவிட காரணம் திமுக தான். வரும் காலங்களில் ஒரு தமிழனை பிரதமராக்க உறுதி எடுப்போம் என்று அவர் தெரிவித்துள்ளார்.