ஆரோ என்னும் நிறுவனம் அமெரிக்காவை தலைமைச் செயலகமாக கொண்டு செயல்பட்டு வருகின்றது. அந்த நிறுவனத்தில் இந்தியாவை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் பணியாற்றி வருகிறார். இதனையடுத்து அந்த இன்ஜினியர் நிறுவனத்தில் சேர்ந்தது முதல் தற்போது வரை விடுப்பு எடுக்கவில்லை. இந்நிலையில் இதுபற்றி கவனித்த அந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.ரோசன் படேல் அந்த உழியர்க்கு மெசேஜ் செய்துள்ளார்.

அதில் “நீங்கள் வெகு நாட்களாக விடுப்பு எடுக்காமல் பணிபுரிவதால் தற்போது சில நாட்களுக்கு நீங்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளுங்கள்” என தெரிவித்திருந்தார். அதற்கு அந்த ஊழியர் “எனக்கு விடுப்பு வேண்டாம் சார் என்னுடைய உடல் நமது பிராடக்ட் மார்க்கெட்டை அடையும் வரை படகாக செயல்படும்” என கூறியுள்ளார். இதனால் மனம் நெகிழ்ச்சியடைந்த சி.இ.ஓ எக்ஸ் என்னும் வலைதளத்தில் அவர்களின் உரையாடலை பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.