இன்ஸ்டாகிராமில் வெளியாகும் ஒரு வீடியோ தற்போது நடுரோட்டில் சாலை பாதுகாப்பு குறித்த விஷயத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. அதாவது அந்த வாலிபர் ஒரு நல்ல ஐடியா கொடுப்பதாக கருதி அந்த வீடியோவை வெளியிட்டு இருந்தாலும் சாலைகளில் இது போன்று ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது உயிருக்கே அச்சுறுத்தல் ஆக அமையலாம். அதாவது அந்த வீடியோவில் முன்னாள் செல்லும் வாகனம் பிரேக் டவுன் ஆகிவிட்டது என்பது போல் தோன்றுகிறது.

இதனால் பின்னால் மற்றொரு வாகனம் செல்லும் நிலையில் அந்த வாகனத்தின் முன்பக்கத்தை தொங்கிக்கொண்டு வாலிபர் முன்னாள் செல்லும் வாகனத்தின் மீது ஒரு காலை வைத்து தள்ளி செல்கிறார். ஒருவேளை திடீரென வாகனம் எதுவும் வந்தால் பிரேக் போட நேரிடும். அப்படி பிரேக் போட்டால் அந்த வாலிபரின் உயிரே‌போய்விடும். ஒரு பயனர் ஒரு பிரேக் போட்டால் எல்லாம் முடிந்து விடும் என்று கமெண்ட் செய்துள்ளார். மேலும் இந்த வீடியோ தற்போது மிகவும் வைரலாகி வரும் நிலையில் சாலைகளில் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ரீல்ஸ் மோகத்தினால் ஈடுபடக்கூடாது என பலரும் கூறி வருகிறார்கள்.

 

 

View this post on Instagram

 

A post shared by MFM (@rooted_brain)