சென்னையில் அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, சசிகலா அதிமுகவை 90 சதவீதம் இணைத்துவிட்டதாக கூறுவது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்றது. அதிமுக தொண்டர்களின் ரத்தத்தை குடித்த அட்டைப்பூச்சி ஓபிஸ் போன்றவர்களை மீண்டும் அதிமுகவில் சேர்ப்பதற்கு தயாராக இல்லை.

அண்ணாமலை என்ற வேதாளம் எங்களை விட்டு விட்டு தற்போது செல்வப் பெருந்தகை மீது ஏறி இருக்கிறது என்று கூறினார். இதற்கு பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, இந்த வேதாளம் வந்திருப்பதே தமிழ்நாட்டில் உள்ள பல பேய்களை ஓட்டுவதற்காக தான். ஒரு பேயை ஓட்டும்போது இன்னொரு பேய் வருவதால் ஒவ்வொரு பேயாகத்தான் ஓட்ட முடியும் என்று கூறினார். மேலும் அண்ணாமலை மற்றும் ஜெயக்குமார் இடையே கருத்து மோதல் ஏற்பட்டிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.