திருநெல்வேலி மாவட்டம் வண்ணாரப்பேட்டையில் ஸ்ரீ நித்தியானந்த்-மேழ் சிதரமணி தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுக்கு விவேகானந்த் (24) என்ற மகன் இருந்துள்ளார். இதில் கணவன் மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வரும் நிலையில் மகன் தன் தந்தையுடன் வசித்து வந்துள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன்பாக தன் தாயை பார்ப்பதற்காக விவேகானந்த் மங்கலம் நொடியால் விளை பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளார்.

இது தொடர்பாக ‌ விவேகானந்திடம் அவருடைய தாயார் கேட்டுள்ளார். அப்போது தூத்துக்குடியைச் சேர்ந்த ஒரு இளம் பெண்ணை காதலித்து வந்ததாக கூறியுள்ளார். அதோடு அந்த பெண் உடல்நலம் சரியில்லாமல் ‌ கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இறந்துவிட்டதாகவும் அந்த வேதனையிலிருந்து என்னால் மீண்டும் வர முடியவில்லை எனவும் கூறி கதறி அழுதுள்ளார். அதோடு மது குடிக்கும் பழக்கத்திற்கும் அடிமையாகியுள்ளார். இதற்கிடையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் திடீரென விவேகானந்த் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.