சவுதி அரேபியாவுக்கு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் இருந்து மக்கள் வேலைக்காக செல்கிறார்கள்.‌ இந்நிலையில் சவுதி அரேபியாவில் வெளிநாட்டினருக்கு தற்போது மரண தண்டனை விதித்துள்ளதாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த சனிக்கிழமை ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு போதை பொருள் கடத்திய குற்றச்சாட்டில் மரண தண்டனை வழங்கி‌ அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு  பிறகு தான் வெளிநாட்டினருக்கு சவுதி அரேபியாவில் வழங்கப்படும் மரண தண்டனை குறித்து தகவல் வெளிவந்துள்ளது. இதுவரை 101 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளனர்.

இந்த வருடத்தில் இதுவரை 274 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அதில் 101 பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. இது கடந்த வருடம் மற்றும் அதற்கு முந்தைய வருடங்களை விட மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது. அதன்படி பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 21 பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோன்று சூடான், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா 3 பேர், எத்தியோப்பியாவை சேர்ந்த 7 பேர், ஏமன் நாட்டைச் சேர்ந்த 20 பேர், சிரியாவை சேர்ந்த 14 பேர், நைஜீரியாவை சேர்ந்த 10 பேர், எகிப்து நாட்டைச் சேர்ந்த ‌9 பேர், ஜோர்டான் நாட்டைச் சேர்ந்த ‌8 பேர் என பல்வேறு நாடுகளை சேர்ந்த 101 பேருக்கு தூக்குத் தண்டை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் 69 பேர் போதைப் பொருள் கடத்தியதற்காக தூக்கு தண்டனையை பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் சர்வதேச அரங்கில் இந்த மரண தண்டனைகள் கவலை அளிப்பதாக அமைந்துள்ளது.