ஜம்மு காஷ்மீர் குல்காம் பகுதியில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற முன்னாள் முதல்வர் ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் பேசியபோது, “காஷ்மீரில் 370 ஆவது பிரிவு ரத்து செய்யப்பட்டால் துப்பாக்கி சண்டைகளிலிருந்து நிவாரணம் கிடைக்க பெறும் என்று மத்திய அரசு நம்பிக்கை கொடுத்தது. ஆனால் இந்த பகுதியில் துப்பாக்கி சண்டை நடந்து ஒரு வாரம் கூட இன்னும் ஆகவில்லை.

ஐந்து பேர் என்கவுண்டரில் கொல்லப்பட்டு அவர்கள் பயங்கரவாதிகள் என்று அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மக்களை மட்டும் அல்ல ஒட்டுமொத்த இந்திய மக்களையும் ஏமாற்றி விட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.