மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள தார் மாவட்டத்தில் ஒரு கிராமம் அமைந்துள்ளது. இங்கு நடுரோட்டில் ஒரு பெண்ணை பிடித்து சுற்றி நின்று ஆண்கள் பலர் மரக்கட்டையால் கொடூரமாக அடித்து துன்புறுத்துகிறார்கள். அப்போது அந்த இடத்தில் பலர் சுற்றி நின்றார்கள். அவர்கள் அந்தப் பெண்ணை காப்பாற்ற எந்த ஒரு முயற்சியும் செய்யவில்லை. அதற்கு பதிலாக அந்த சம்பவத்தை அவர்கள் வீடியோவாக பதிவு செய்து கொண்டிருந்தனர்.

இது தொடர்பான வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் முக்கிய குற்றவாளியான நிர்சிங் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளை காவல்துறையினர் வலை வீசி தேடி வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் சாவித்திரி தாக்கூரின் தொகுதியில் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.