குஜராத் மாநிலத்தில் திறன் மேம்பாடு கழகத்தில் ஒரு இஸ்லாமிய பெண் பணிபுரிந்து வருகிறார். இந்தப் பெண்ணுக்கு முதலமைச்சரின் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் வீடு ஒன்று ஒதுக்கப்பட்டது. இந்த குடியிருப்பில் மொத்தம் 462 குடும்பங்கள் இருக்கிறது. இந்நிலையில் குடியிருப்பு வாசிகள் அனைவரும் அந்த முஸ்லிம் பெண்ணை அங்கு குடியமர்த்த கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். இது தொடர்பாக அவர்கள் மாவட்ட ஆட்சியர் மற்றும் முதலமைச்சருக்கு ஒரு கடிதம் எழுதி அனுப்பியுள்ளனர். அதில் எங்கள் பகுதியை சுற்றி 4 கிலோமீட்டர் தூரத்துக்கு எந்த ஒரு முஸ்லிம் குடும்பங்களும் இல்லை.

இப்படி இருக்கும்போது ஒரு இஸ்லாமிய பெண்ணை நாங்கள் வசிக்கும் பகுதியில் குடியமர்த்தினால் எங்களுடைய அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும். எனவே அந்த பெண்ணை அங்கு குடியமர்த்தக் கூடாது. அவரை குடி வைப்பது எங்கள் அமைதியில் தீயை வைத்து எரிப்பது போன்று என்று கூறினர். அந்த பெண் அங்கு குடியேறுவதற்கு கடந்த 2020 ஆம் ஆண்டு முதலில் எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில் தற்போது அந்த பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. மேலும் அந்த பெண்ணை அங்கு குடியமர்த்தக் கூடாது என்று வற்புறுத்தி குடியிருப்பு வாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.