
சமீபகாலமாகவே பல நிறுவனங்கள் பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருவது தொடர் கதை ஆகி வருகிறது. அந்த வகையில் ஆன்லைன் வாடகை தளமான Frontdesk 2024 ஆம் வருடத்தின் தொடக்கத்திலிருந்து அதனுடைய பணியாளர்களின் பணிநீக்கம் செய்து வருகிறது. சமீபத்தில் 200 ஊழியர்களை ஒரே கூகுள் மீட்டில் அழைத்து அந்த காலிலேயே இரண்டு நிமிடத்தில் Fired செய்யப்பட்டதாக அறிவித்து அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது . இந்த பணி நீக்கத்தில் முழு நேர, பகுதி நேர ஊழியர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் இருக்கிறார்கள். அது மட்டுமின்றி இந்நிறுவனம் இப்பொழுது மூடப்படும் விளிம்பில் இருக்கிறது.
இந்த நிறுவனத்தின் CEO ஊழியர்களிடம் வெளிப்படையாகவே நிறுவனம் திவால் நிலைக்கு தள்ளப்பட்டு விட்டதாக கூறி ஊழியர்களை வேலையை விட்டு தூக்குவதாக தெரிவித்துள்ளார். ஆனால் இந்த செய்தி குறித்து நிறுவனத்திடம் கேட்ட கேள்விக்கு பதில் எதுவும் கூறவில்லை. புதிய மூலதனம் மூலமாக நிறுவனத்தை விரிவாக்கம் செய்ய நினைத்து நிறுவனம் அந்த முயற்சியில் தோல்வி அடைந்து தற்போது திவால் அடைந்துள்ளது. 2023 ஆம் வருடம் உலகளாவிய தொழில்நுட்பம் மற்றும் தொடக்க துறையில் கிட்டதட்ட 2.6 லட்சம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.