
கடலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்து எரித்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடலூர் அருகே உள்ள காரக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுதன் குமார்(40) இவர் ஹைதராபாத்தில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் பணி செய்து வந்தார் ,. இவருடைய தாய் கமலேஸ்வரி(60) மற்றும் இவரது மகன் நிஷாந்தன்(10) ஆகிய மூன்று பேரும் கடந்த திங்கள்கிழமை அவர்கள் வீட்டில் கொலை செய்து எரிக்கப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டன. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது இது தொடர்பாக போலீசார் 7 தனிப்படைகள் அமைத்து 4 நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர்.
சுமார் 200க்கும் மேற்பட்ட நபரிடம் விசாரணை நடைபெற்றது, அந்த பகுதியில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட செல்போன் அழைப்புகளை வைத்தும் விசாரணை நடைபெற்றுவந்தது . மேலும் அவர்கள் பக்கத்து வீட்டு நபர்களிடமும் விசாரணை செய்த நிலை எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அதே தெருவை சேர்ந்த சங்கர் ஆனந்த் மற்றும் நெல்லி குப்பத்தை சேர்ந்த சாகுல் அமீது என இருவரும் சென்னையில் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
தற்போது இந்த வழக்கு சம்பந்தமாக சங்கர் ஆனந்திடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் கூறியதாவது; தன் தாய் தற்கொலைக்கு சுதன் குமார் தான் காரணம் என்பதால் குடும்பத்துடன் கொலை செய்ததாக சங்கர் ஆனந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளார். அதாவது தந்தை இழந்து வாழ்ந்த சங்கர் ஆனந்தின் தாய் கடந்த ஜனவரி மாதம் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தாயின் தற்கொலைக்கு சுதன் குமார் தான் காரணம் எனவே கொலை செய்ததாக வாக்கு மூலம் அளித்துள்ளார்.
மேலும் சம்பவம் நடந்த அன்று சுதன் குமாரின் தாய் கமலேஸ்வரி “தன்னை ஒரு அனாதை” என்று திட்டியதால் மேலும் ஆத்திரம் அடைந்ததாகவும் சங்கர் ஆனந்த் வாக்குமூலம் கொடுத்துள்ளார். மேலும் அந்த சிறுவனை வெளியே விட்டால் நடந்த விஷயங்களை வெளியே சொல்லி விடுவான் என்ற காரணத்தால் அன் சிறுவனையும் கொன்றதாக வாக்கு மூலம் கொடுத்துள்ளார். பின்னர் ஜூலை 14 அன்று நண்பருடன் சேர்த்து எரித்து கொன்றுவிட்டு நகைகளை எடுத்துக்கொண்டு தப்பி சென்றதாக கூறினான். அப்போதுதான் போலீசுக்கு தங்கள் மீதும் சந்தேகம் வராது என்று எண்ணியதாக தெரிவித்துள்ளார்.