
சென்னை மெட்ரோ ரயில், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் ஆகியவற்றில் ஒரே டிக்கெட்டுடன் பயணம் செய்யும் முறை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்தில் அமல்படுத்தப்படும். என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
சென்னையின் முக்கிய போக்குவரத்து முறைகளாக இருக்கும் இந்த மூன்றிலும் தற்போது வெவ்வேறு பயணச்சீட்டு முறை பின்பற்றப்படுகிறது. அதனை சீரமைக்கும் முடிவில் போக்குவரத்துத் துறை இத்திட்டத்தை செயல்படுத்தவுள்ளது.