
புதுக்கோட்டை மாவட்டம் வயலோகம் என்ற கிராமத்தில் சிறுவர்களுக்கு மஞ்சள் காமாலை தொற்று வேகமாக பரவி வருகின்றது. இது பற்றி அதிகாரிகளிடம் பலமுறை புகார் அளித்த போதிலும் அரசு சார்பில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் கூறுகின்றனர். பள்ளியில் 74 மாணவர்கள் படித்து வரும் நிலையில் கீழத்தெரு பகுதியை சேர்ந்த 12 மாணவர்களுக்கு குடிநீரால் பரவும் A வகை வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மஞ்சள் காமாலை தொற்று காரணமாக ஒரு சிறுவன் உயிரிழந்து உள்ள நிலையில் தற்போது வரை 12 சிறுவர்கள் மஞ்சள் காமாலை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர் உயிரிழந்த பிறகு தான் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தொடங்கியுள்ளதாகவும் ஊர் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.