Department of school education என்ற பெயரில் புதிய தளம் ஒன்றை பள்ளிக்கல்வித்துறை தொடங்க உள்ளது. பெற்றோருக்கும் பள்ளிக்கும் இடையிலான தகவல் தொடர்பை எளிதாக்கவும் வாட்ஸ்அப் மூலம் தகவல் பரிமாற்றம் செய்யவும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மூலமாக ஒருமுறை தகவல் அனுப்பினால் பதிவு செய்யப்பட்ட ஒரு கோடி தொலைபேசி எண்களின் வாட்ஸ் அப்பிற்கு செல்லும் என அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.