
போஸ்ட் ஆபீஸ் பல்வேறு திட்டங்களையும், சேவைகளையும் வழங்கி வருகிறது. பிரத்தியேகமாக மூத்த குடிமக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதாவது ஓய்வுக்குப் பிறகு வழக்கமான வருமானத்தை இழக்கக்கூடாது என்பதற்காக போஸ்ட் ஆபீஸ் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தில் இணைவதன் மூலமாக 5 வருடங்களுக்கு ஒவ்வொரு மாதமும் 20,500 தொகையை பெறலாம். அறுபது வயதுக்கு மேற்பட்ட முதியவர்களுக்காக உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலமாக ஓய்வுக்கு பிறகு சீனியர் சிட்டிசர்கள் கவலைப்பட தேவை கிடையாது. வழக்கமான வருமானத்தை இழக்க கூடாது என்பதை நோக்கமாகக் கொண்டுதான் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இந்த திட்டத்திற்கு தற்போது 8.2% வட்டி விகிதம் கொடுக்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒருவர் 15 லட்சம் டெபாசிட் செய்வதன் மூலமாக மாதந்தோறும் 10,250 வருமானமாக பெறலாம். அதிகபட்சமாக 30 லட்சம் முதலீட்டிற்கு ஒவ்வொரு வருடமும் வட்டியாக 2,46,000 கிடைக்கும். இது மூலமாக 20,500 மாத வருமானமாக பெறலாம். இந்த சேமிப்பு திட்டத்திற்கு பிரிவு 80c-இன் படி வருமான வரி விலக்கும் உண்டு. 1.5 லட்சம் வரை முதலீட்டாளர்கள் வரி விலக்கு பெறலாம்.
டெபாசிட் செய்யும் தொகையை பொறுத்து ஒவ்வொரு மாதமும் பணம் அல்லது வட்டி முதலீட்டாளர்களுக்கு கிடைக்கும் இந்த திட்டமானது இந்திய அரசால் செயல்படுத்தப்பட்டு வருவதால் முதலீடு செய்யப்படும் தொகை பாதுகாப்பானதாகவும், உத்தரவாதமான வருமானமாகவும் கிடைக்கும். குறைந்தபட்சமாக ஆயிரத்திலிருந்து அதிகபட்சமாக முப்பது லட்சம் வரை முதலீடு செய்து சேமிப்பு கணக்கை தொடங்கலாம்.