ஒவ்வொரு மாதமும் நிலையான வருமானம் பெற விரும்பினால் எல்ஐசி புதிய ஜீவன் சாந்தி பாலிசியை எடுக்கலாம். இதில் 30 முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் இணைந்து பயன்பெறலாம். பாலிசிதாரர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் எதுவும் தேவையில்லை. இந்தத் திட்டத்தில் 10 லட்சம் ரூபாய் செலுத்தி 10 ஆண்டுகள் ஒத்திவைப்பு காலத்தை தேர்வு செய்தால் 11 ஆம் ஆண்டு முதல் மாதம் பத்தாயிரம் ரூபாய் உங்களுக்கு கிடைக்கும். இது குறித்த கூடுதல் விவரங்களை அறிய அருகில் உள்ள எல்ஐசி அலுவலகம் அல்லது என்ற இணையதளத்தை அணுகலாம்.