தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் மிஷ்கின். இவர் அண்மையில் இயக்குனர் ஓம் விஜய் இயக்கியுள்ள வெள்ளிமலை படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசினார். அவர் பேசியதாவது, இந்த படத்தை பார்க்கும் போது என்னுடைய முதல் படம் வந்தது போன்று எளிமையாக தோன்றுகிறது.

இந்த வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் இருக்கும்போது அதை எப்படி தீர்ப்பது என்று தெரியவில்லை. நான் மகிழ்ச்சியாக இருக்கக்கூடிய ஒரே இடம் தியேட்டர் மட்டும்தான். இது போன்ற படங்களை நாம் தியேட்டரில் தான் பார்க்க வேண்டும். ஓடிடியில் பார்க்க வேண்டும் என்பது நினைப்பது ரவுடித்தனம். மேலும் சாமி இல்லாத ஒரே இடம் தியேட்டர் தான் என்று தெரிவித்தார்.