
உத்திரப் பிரதேசத்தில், 8 வயது சிறுமி ரயிலின் எமர்ஜென்சி ஜன்னல் வழியாக இரவு நேரத்தில் தவறி விழுந்து பெரும் அதிர்ச்சியூட்டிய சம்பவம் நிகழ்ந்தது. மத்திய பிரதேசத்தில் இருந்து மதுராவுக்கு சென்றுக்கொண்டிருந்த ரயிலில் இந்த விபத்து ஏற்பட்டது. RPF மற்றும் GRP அதிகாரிகள் 18 கி.மீ தூரம் நடந்து, புதருக்குள் அரை மயக்க நிலையில் இருந்த சிறுமியை கண்டனர்.
சிறுமி உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக லிலத்பூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அதிகாரிகளின் தீவிர முயற்சியால் சிறுமி உயிர் காக்கப்பட்டதைக் காட்டுகிறது. மேலும் ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுமையை இரவு முழுவதும் சல்லடை போட்டு தேடி போலீசார் பத்திரமாக மீட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.