மும்பையில் தினசரி புறநகர் ரயில்களில் ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்கிறார்கள். குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் பயணிகளின் கூட்டம் அதிக அளவில் இருப்பதால் பலர் கூட்ட நெரிசலில் சிரமப்படுகிறார்கள். இதனால் ரயிலின் வெளியே படிக்கட்டுகளில் ‌ தொங்கியபடி பலர் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கிறார்கள்.

அந்த வகையில் ரயிலின் மூடிய கதவுகளுக்கு வெளியே படிக்கட்டில் சில வாலிபர்கள் தொங்கியபடி பயணம் செய்தனர். அப்போது அருகே இருந்த மின்கம்பத்தின் மீது உரசி ஒரு வாலிபர் திடீரென கீழே விழுந்துவிட்டார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.