
கடந்த 25ஆம் தேதி திருச்சியிலிருந்து சென்னை சென்ற மென்பொருள் பொறியாளர் ஒருவர் ரயிலில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை பிடிக்க ரயில்வே போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கில் குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபரின் புகைப்படத்தை ரயில்வே போலீசார் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படத்தில் உள்ள நபர் குறித்து தகவல் கொடுப்பவர்களுக்கு தக்க சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளனர். பொதுமக்கள் அனைவரும் இணைந்து இந்த குற்றவாளியை பிடிக்க உதவ வேண்டும் என ரயில்வே போலீசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
புகைப்படத்தில் இருக்கும் குற்றவாளி குறித்த தகவல்கள் தெரிந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்:
DSP – 9444115461 / 9443007015
Control Room – 9498136719