தமிழகத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் பணியிடங்களுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்தவர்களுக்கு நவம்பர் 19ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கான அனுமதிச்சீட்டை நவம்பர் 13 முதல் https://tnstc.onlinereg.in/என்ற அரசு இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். வேலைவாய்ப்பு அலுவலகமூலம் விண்ணப்பித்தவர்களுக்கு அனுமதிச்சீட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.