
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் தாயார் பழனியம்மாள் நேற்று இரவு காலமானார். இவருடைய மறைவுக்கு முக்கிய பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்தார்கள். அதன்பிறகு முதல்வர் ஸ்டாலின் ஓ. பன்னீர்செல்வத்தின் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்த நிலையில் திமுக கட்சியின் சார்பாக அமைச்சர் ஐ. பெரியசாமி நேரில் சென்று பன்னீர் செல்வத்தின் தாயார் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அதன்பிறகு அமைச்சர் பெரியசாமி ஓ. பன்னீர் செல்வத்திற்கு ஆறுதல் தெரிவித்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில் தான் நேரில் வந்து இரங்கல் தெரிவித்ததாக பேட்டியில் தெரிவித்தார்.
அதன் பிறகு அமமுக கட்சியின் சார்பில் அமைப்புச் செயலாளர் மகேந்திரன், தேனி வடக்கு மாவட்ட செயலாளர் ஜெயக்குமார், தெற்கு மாவட்ட செயலாளர் முத்துசாமி உள்ளிட்டோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். மேலும் அதிமுக கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ, பாஜக அண்ணாமலை, தாமாக தலைவர் ஜிகே வாசன் போன்றவரும் ஓபிஎஸ் தாயார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்திருந்த நிலையில் அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமி உட்பட யாருமே இரங்கல் தெரிவிக்கவில்லை.