கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தின் ஆபத்தை துளியும் உணர்ந்து கொள்ளாமல் இளைஞர் ஒருவர் மீண்டும் கள்ளச்சாராயம் குடித்துள்ளார். அவருடைய மாமியார் ஏற்கனவே கள்ளச்சாராயம் குடித்ததால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகின்றது. இந்த நிலையில் இப்போது மருமகனும் முழு போதையில் சாலையோரத்தில் கிடந்துள்ளார்.

இதில் மற்றொரு கொடுமை என்னவென்றால் அவருடைய குழந்தையும் கூடவே இருந்துள்ளது. குடிபோதையில் தந்தை இருக்க அந்த பெண் குழந்தை அவருக்கு அருகிலேயே அமர்ந்து இருந்தது. ஒரு கட்டத்தில் அந்த போதை நபரை கட்டி அணைத்தபடி அந்த சிறுமி இருந்த நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.