ஓய்வூதியம் பெறுபவர்கள் அனைவரும் ஒவ்வொரு வருடமும் தங்களின் வாழ்நாள் சாலைகளை சமர்ப்பிப்பது அவசியமாகும். அதன்படி பாதுகாப்பு துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியம் பெறுபவர்கள் வருடாந்திர அடையாளத்தை ஆண்டுதோறும் சமர்ப்பிக்க வேண்டும். ஓய்வூதிய நிர்வாகத்திற்கான அமைப்பு அல்லது ஸ்பார்ஷ் மூலம் ஓய்வூதியம் பெறும் அனைத்து பாதுகாப்பு ஓய்வூதியதாரர்களும் பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் வருடாந்திர அடையாளத்தை முடிக்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனை சமர்ப்பித்தால் மட்டுமே ஓய்வூதியதாரர்கள் மாதாந்திர ஓய்வூதியத்தின் தொடர்ச்சியான பணத்தை பெற அனுமதிக்கப்படும் எனவும் அதனால் வருகின்ற பிப்ரவரி 20ஆம் தேதிக்குள் பயனர்கள் வருடாந்திர அடையாளத்தை முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.