
நியூசிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌதி. இவர் தற்போது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இவர் இதுவரை 104 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 385 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
இவர் அடுத்த மாதம் சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறும் போட்டியில் விளையாடிய பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதே நேரத்தில் இங்கிலாந்து WTC போட்டிக்கு தகுதி பெற்றால் அந்த போட்டியில் விளையாடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும் டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து டிம் சௌதி ஓய்வை அறிவித்தது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.