பிரபல பாடகி சுசித்ரா கடந்த சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில் தன்னுடைய முன்னாள் கணவர் கார்த்திக் குமார் பற்றி பல்வேறு குற்ற சாட்டுகளை முன்வைத்திருந்தார். அதாவது கார்த்திக் குமார் அடிக்கடி நண்பர்களுடன் மும்பைக்கு செல்வதாகவும் அவர் ஓரினச்சேர்க்கையாளராக இருக்கலாம் என்று தனக்கு சந்தேகம் இருப்பதாகவும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு தற்போது நடிகர் கார்த்திக்குமார் பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நான் ஓரினச்சேர்க்கையாளராக இருந்தால் அதற்காக வெட்கப்பட மாட்டேன். பாலியல் விஷயத்தில் நான் எந்த விருப்பத்தில் இருந்தாலும் அதற்காக நான் பெருமைப்படுகிறேன். அனைத்து பாலினங்களும் பெருமை மற்றும் ஆதரவுக்கு உரியவர்கள். எனவே இதில் அவமானம் என்று எதுவும் கிடையாது. பெருமை மட்டும் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார்.