ஹைதராபாத்தில் விவசாயம் சார்ந்த நிறுவனம் உள்ளது. இங்கு கோபால் என்பவர் வேலை பார்த்தார். இவர் நிறுவனத்தின் லாக்கரில் இருந்த 20 லட்சம் ரூபாய் பணத்திற்கும் மேல் திருடிவிட்டு தப்பி ஓடினார். அவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் கோபால் தான் திருடிய பணத்தை ஒடிசா மாநிலத்தில் இருக்கும் தனது மாமியார் வீட்டில் மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அந்த தகவலின் படி போலீசார் கோபாலின் மாமியார் வீட்டிற்கு சென்று சோதனை நடத்தினர். அவர்களது வீட்டில் இருந்த மாட்டு சாணக் கோவிலுக்குள் 20 லட்ச ரூபாய் பணத்தை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அந்த பணத்தை போலீசார் பத்திரமாக மீட்டனர். தலைமறைவாக இருக்கும் கோபால் மற்றும் அவரது மைத்துனர் ரவீந்திரனை போலீசார் தேடி வருகின்றனர்.