தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சீரும் சிறப்புமாக நடைபெற்று முடிந்தது. இந்த மாநாட்டை பார்க்கையில் கிட்டத்தட்ட விஜயகாந்த் அவர்களின் சாயலை விஜய் அவர்களிடம் காண முடிகிறது என சில கருத்துக்கள் பேசப்பட்டு வருகின்றன. விஜயகாந்த் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் விஜய் அவர்கள் போலவே மிகவும் தைரியமாக பேசி தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்து மக்களிடையே அமோக வரவேற்பை பெற்றிருந்தார். அவர் நடத்திய முதல் மாநாடு உலக கின்னஸ் சாதனை படைத்தது.

அதை தளபதியின் மாநாடு கூட முறியடிக்கவில்லை. மாநாட்டிற்கு இரண்டு புள்ளி ஐந்து லட்சம் இருக்கைகள் மட்டுமே போடப்பட்ட நிலையில், அதுக்கும் மேல் கட்டுக்கடங்காமல் கூட்டம் வந்து கிட்டத்தட்ட 25 லட்சம் பேர் வரை அந்த மாநாட்டில் கலந்து கொண்டதாக தற்போதைய தேமுதிகவின் பொது செயலாளர் பிரேமலதா சமீபத்தில் கூட தெரிவித்திருந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல விஜயகாந்த் அவர்களை மீடியாக்கள் தவறாக சித்தரித்து அவருடைய அரசியல் பயணத்தை நாசம் செய்து விட்டதாக சில கருத்துக்களும் உண்டு.

குறிப்பாக ஒவ்வொரு அரசியல் கட்சியினரும் அவர்களுக்கென தனியான நியூஸ் மீடியா சேனல்கள் வைத்துள்ளனர். அவர்களின் தவறான சித்தரிப்பு தவறான கருத்துக்கள் அவரது அரசியல் பயணத்தை முடக்கி விட்டது அதேபோல த. வெ.க மாநாடு நடந்த இந்நாளில் பல பகுதிகளில் பல பிரச்சினைகள் நடந்தன. அனைத்திற்கும் த வெ க வுடன் மீடியாக்கள் முடிச்சு போட்டதாகவும் நடக்காத ஒன்றை நடந்ததாக கூறி பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டும் தவெக தொண்டர்கள் தரப்பிலிருந்து முன்வைக்கப்பட்டது.

இதேதான் விஜயகாந்த் அவர்களுக்கும் நடந்தது.  அதற்கான ஒரு வீடியோ தான் இது என ஒரு வீடியோ ஒன்று இணையத்தில் வெளியிடப்பட அது வைரலாகியுள்ளது. அதில், விஜயகாந்த் அவர்களிடம் சட்ட ஒழுங்கு குறித்து கிண்டலாக கேள்வி ஒன்று கேட்கப்பட அது சரியில்லாத கேள்வி என்பதை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட விஜயகாந்த் நீங்கள் கலைஞர் டிவி தானே அப்படித்தான் கேட்பீர்கள் என்பது போல் பதில் அளித்து இருப்பார். விஜயகாந்த் அவர்களிடம் நடந்து கொண்டதைப் போலவே த. வெ.க விடம் மீடியாக்கள் நடந்து கொள்வதாக குற்றச்சாட்டை தமிழக வெற்றி கழக  தொண்டர்கள் முன் வைத்துள்ளனர்.