
முன்னாள் அமைச்சரும் வேதாரண்யம் தொகுதி அதிமுக எம்எல்ஏவும் ஆன ஓ.எஸ் மணியனின் இளைய சகோதரரான ஒஎஸ் மூர்த்தி இன்று அதிகாலை அவருடைய வீட்டில் காலமானார். உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சையில் இருந்து வந்த அவர் இன்று காலை உயிரிழந்தார். அவருடைய மறைவுக்கு அதிமுக சார்பாக இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை தலை ஞாயிறு அருகே ஓரடியம்புலம் இல்லத்தில் இருந்து தொடங்க உள்ளது.