கடகம் ராசி அன்பர்களே,
இன்று நல்ல விஷயங்கள் கண்டிப்பாக நடைபெறும் காரியங்கள் அற்புதமாக சூடு பிடிக்க துவங்கும். அடுத்தவர்களின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். மாற்றங்கள் ஏற்றங்கள் ஏற்படும். திறமையால் வெற்றி பெறும் சூழல் உள்ளது. நல்லது கெட்டதுகளில் கலந்து கொள்வீர்கள். யோகமான நாளாக இன்றைய நாளை அமைத்துக் கொள்வீர்கள்.
பிரிந்து சென்ற தம்பதிகள் ஒன்று சேருவார்கள். மனதில் புது உற்சாகம் பிறக்கும். குடும்பத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து விடும். பிள்ளைகள் படிப்பில் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்கும் போது கவனமாக இருங்கள். தேவையற்ற விஷயங்களில் ஈடுபட வேண்டாம். பெண்கள் இன்று அற்புதமாக செயல்பட்டு வெற்றி பெறுவீர்கள். யோகமான பலன் ஏற்படும்.
ஆசைப்பட்ட பொருளை வாங்கி மகிழ்வீர்கள். இன்று மாணவர்களுக்கு மன சஞ்சலம் ஏற்பட்டு சரியாகும். வரும் தேர்வில் வெற்றி பெற முயற்சிகளை மேற்கொள்ளுங்கள். இன்று எள் கலந்த சாதத்தை காக்கைக்கு அன்னமாக கொடுத்துவிட்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: தெற்கு
அதிஷ்ட எண்: ஆறு ஏழு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: பச்சை மற்றும் மஞ்சள் நிறம்