கடகம் ராசி அன்பர்களே,

இன்று கிடைக்கின்ற வாய்ப்புகளை எல்லாம் அற்புதமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீர்ந்துவிட்டது. நினைத்த காரியத்தை அற்புதமாக செய்து முடிப்பீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கணவன் மனைவிக்கு இடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு மன திருப்தியை ஏற்படுத்தும். சுப நிகழ்ச்சிகள் தங்குதடை இன்றி ஏற்படும். திருமண முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உறவினர்களால் ஏற்பட்ட விரிசல் விலகும். தடுமாற்றம் விலகிச் செல்லும். காரியங்கள் சூடுபிடிக்க துவங்கும். இன்று எந்த செயலிலும் நன்மை நடக்கும். பெண்களுக்கு யோகமான நாளாக இருக்கும். பிடித்தமான இடத்திற்கு சென்று வருவீர்கள். அற்புதமாக காரியங்களில் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். திருமண முயற்சிகளில் வெற்றி இருக்கும். இன்று மாணவர்கள் கல்வியில் அக்கறை எடுத்துக் கொள்ளுங்கள். எதிலும் நிதானமாக செயல்படுங்கள். சந்தேகங்களை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு

அதிஷ்ட எண்: 7 மற்றும் 9

அதிஷ்ட நிறம்: இள மஞ்சள் மற்றும் பச்சை நிறம்