கடகம் ராசி அன்பர்களே,
இன்று வாய்ப்புகளை அற்புதமாக பயன்படுத்திக் கொள்ளுங்கள். கிடைக்கும் வாய்ப்புகளை விட்டு விட வேண்டாம். எல்லோர் மனதிலும் இடம் பிடிப்பீர்கள். நேர்மையாக நடந்து கொள்வீர்கள். எண்ணற்ற மாற்றங்கள் ஏற்றங்கள் கண்டிப்பாக நிகழக்கூடும். பொருளாதாரம் சீராக உயரும். நட்பு வட்டம் விரிவடையும். எடுக்கும் ஒவ்வொரு முயற்சியிலும் வெற்றி இருக்கும்.
அடுத்தவர்களிடம் பேசும்போது கவனமாக இருங்கள். குலதெய்வ கோவிலுக்கு சென்று வர பாருங்கள். தொழிலில் ஏற்படும் மாற்றங்களால் வருமானம் அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். பிள்ளைகள் நலனில் அக்கறை எடுத்துக் கொள்வீர்கள். மனதிற்கு நிம்மதி ஏற்படும். இன்று பெண்கள் உணர்ச்சிவசப்பட வேண்டாம்.
எந்த முடிவையும் சிந்திக்காமல் எடுக்க வேண்டாம்m கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். படித்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். இன்று சித்தர்கள் வழிபாட்டையும் குரு பகவான் வழிபாட்டையும் மேற்கொண்டு எந்த ஒரு காரியத்திலும் ஈடுபடுங்கள். நல்லதே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: மேற்கு
அதிஷ்ட எண்: இரண்டு ஆறு மற்றும் ஒன்பது
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் மஞ்சள் நிறம்