
சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த தன்னுடைய நண்பனை திடீரென்று ஒரு கும்பல் கடத்திச் சென்ற நிலையில் மற்றொரு நண்பர் சாமர்த்தியமாக காப்பாற்றிய காட்சியானது இணையத்தில் வைரலாகி வருகிறது. தற்போதைய காலத்தில் நாட்டில் நடக்கும் மிக சிறிய விஷயங்கள் கூட நொடிப்பொழுதே மக்களை சென்றடைந்து விடுகிறது. இதற்கு சமூக வலைத்தளங்கள் தான் உதவியாக இருக்கின்றன. அந்த வகையில் இரண்டு நண்பர்கள் இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்கள்.
அவர்களை தாண்டி கார் ஒன்று நிறுத்தப்பட்டதோடு உள்ளே இருந்து வெளியே இறங்கி மூன்று மர்ம நபர்கள் நண்பனை காரில் கடத்தி ஏற்டுகிறார்கள். இதை பார்த்த மற்றொரு நண்பன் உடனே சுதாரித்துக் கொண்டு டிரைவர் இருக்கையில் அமர்ந்து கொண்டு சட்டென காரை எடுத்துக்கொண்டு தன்னுடைய நண்பனை காப்பாற்றி எஸ்கேப் ஆகி இருக்கிறார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் இதனை 18 மில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் பார்த்துள்ளனர்.
Bro used 100% of his brain 😂🔥 pic.twitter.com/v2aiB6rXrS
— Guhan (@TheDogeVampire) June 24, 2024