
விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ரக்ஷிதா மகாலட்சுமி. இவர் பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். இப்படி சீரியலில் நடித்துக் கொண்டிருக்கும் போதே நடிகர் தினேஷை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரக்ஷிதா கலந்து கொண்டார். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருக்கும் போது அவரின் கணவர் தினேஷ் இவருக்கு ஆதரவு தெரிவித்தார்.
வெளியில் வந்த பிறகு இருவரும் ஒன்று சேருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் பிரச்சனை தான் கிளம்பியது. இதன் மூலமாக இருவரும் விவாகரத்து கேட்டு பல பிரச்சினைகள் செய்து வருகிறார்கள். இந்நிலையில் ரக்ஷிதா கடந்த காலங்களில் கடந்து வந்த கடினமான பாதைகள் எவ்வாறு இருந்தது என்று கூறும் வகையில் ஒரு பாடலுக்கு கண்ணீருடன் ரீல்ஸ் வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க