
பழங்குடியின மாணவிகளான ரோகிணி மற்றும் சுகன்யா ஆகிய இருவரும் 2024ம் வருடத்திற்கான JEE தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார்கள். இந்நிலையில் இலுப்பூரைச் சேர்ந்த ரோகிணி என்ற மாணவி வேதிப்பொறியியல் எடுத்து திருச்சி என்ஐடி கல்லூரியில் எடுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
அதேபோல் அந்த கல்லூரியில் கரிய கோவிலை சேர்ந்த சுகன்யா என்ற மாணவி உற்பத்தி பொறியியிலும் படிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார் . இதன் மூலம் கடந்த 60 ஆண்டுகளில் திருச்சி NIT-ல் சீட் பெற்ற முதல் பழங்குடியின மானவிகள் என்ற பெருமையை இவர்கள் இருவரும் பெற்றனர்.